Pages

Friday, 27 November 2020

ஐக்கியம் என்றால் என்ன


ஒன்று என்பதைக் குறிக்கும் ஏகம் என்ற சொல்லிலிருந்து உருவானதே ஐக்கியம் என்ற சொல்.

ஏகம் என்பது ஒன்றைக் குறிப்பது.
ஐக்கியம் = ஒன்றிணைந்த, ஒன்றுபட்டதைக் குறிக்கும்.

இகர, எகரச் சொற்கள் ஐகாரமாகத் திரிவதும் சொல் உருவாக்கத்தில் இயல்பாகக் காணமுடிகின்ற ஒன்று.

  • ஏகம் > ஐக்கியம்.

ஒத்த திரிபுகள் :

  • தீரம் > தைரியம்.
  • சிவம் > சைவம்.
  • விண்ணவம் > வைணவம்.
  • மிதிலை > மைதிலி.
  • பித்து > பைத்தியம்.
  • வித்தை > வைத்தியம்.
  • வீரம் > வைரம், வைராக்கியம்.
  • சீலம் > சைலம் ( சேலம்).

இதே வகையில் உகரம் > ஔகாரமாகத் திரியும்.

  • சுகம் > சௌக்கியம்.
  • சுந்தரம் > சௌந்தர்யம்.
  • புத்தம் > பௌத்தம்.
  • பூதிகம் > பௌதிகம்.
  • முன்னம் > மௌனம்.
  • குமாரம் > கௌமாரம்.
  • ருத்ரம் > ரௌத்திரம்.
  • யுவன் > யௌவனம்.
  • உலகம் < லோகம் > லௌகீகம்.

இதே வகையில் திரிந்த சொற்களை உங்களாலும் கண்டுபிடிக்க முடிந்தால் சொல்லுங்கள்.



No comments:

Post a Comment