Pages

Wednesday, 18 November 2020

சேட்டன் என்பது தமிழ் சொல்


சேட்டன் என்பது தமிழ்ச் சொல்லே! - (இன்றைக்கு பெரும்பாலும் மலையாளத்தில் புழக்கத்தில் காணப்பட்டாலும்).

சேட்டன் / சேத்தன் - என்றால் பெரியோன், மூத்தவன், தமையன்.

சேட்டு - என விளிப்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

தமிழில் காணப்படும் இதன் மற்றைய உறவுச் சொற்களைக் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

  • சேடு = பெருமை, சிறப்பு, உயரம்.
  • சேடன் = சிறந்தவன் , உயர்ந்தவன்,
    பெரியோன், கடவுள்.
  • சேட்டம் = மேன்மை.
  • சேடம் = பெருமை , மிகுதி.
  • சேட்டி= தமக்கை (மூத்தவள், மூதேவி).சேட்டி > சேச்சி.

சேட்டன் - என்ற தமிழ்ச்சொல்லின் திரிபே சமஸ்கிருதத்தில் ஜ்யேஷ்ட ( Jyeshta ) என மூத்தவரைக் குறித்தது.

ஒத்த திரிபுகள் : வேட்டி > வேஷ்டி, குட்டம் > குஷ்டம், கட்டம் > கஷ்டம்.

இதன் தொடர்புடைய மற்ற தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு....

  • சேண் = உயரம், சேய்மை, மலைமுகடு, ஆகாயம், துறக்கம்.
  • சேணி = மூப்பர்களால் அமைந்த ஒரு குழு.(senate).
  • சேணியன் = மேல் உலகத்தை ஆளுபவன் - இந்திரன், மலைவாசி, பரணிலிருந்து காப்பவன்.
  • சேணியன் = வயதிலோ அனுபவத்தில் மூத்தவர்களையும் , பதவி, பண்பு, நிலைகளில் உயர்ந்தவர்களையும் குறிப்பது.
  • மேல்நிலையில், உயர்படி நிலையில், முதுநிலையில் முதன்மையானவர்கள்.
  • இதுவே ஆங்கிலத்தில் சீனியர் (Senior) - என்ற சொல்லைத் தந்தது. SENIOR - மிகச்சரியான உச்சரிப்பு சேணியர் என்பதே!
  • Sir - என்கிற ஆங்கிலச் சொல்லின் மூலம் Senior என அகராதிகள் குறிப்பிட்டுள்ளன. அந்த சீனியருக்கே சீனியர் மூலம் தந்தது நம் தமிழ் சேணியன் ஆகும்.

Sir, Senior, Senate - ஆகிய அனைத்தும் தமிழ் மூலத்திலிருந்து இலத்தீன் வழியாக ஆங்கிலம் சென்ற சொற்களாகும்.

No comments:

Post a Comment