“அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்னணுப் புரைய…”
அருஞ்சொல் பதவுரை:
அண்டம் - பெருவெளி, பிரபஞ்சம், Cosmos
உண்டை - உருண்டை, கோளம், கோள், Sphere
பிறக்கம் - (ஒளி பொருந்திய) பிறப்பு, தோற்றம், Birth
அளப்பருந்தன்மை - அளத்தற்கரிய
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் - கோள்கள் ஒன்றை ஒன்று ஈர்த்து அழகாக நிலைத்துச் சுற்றி வரும் நேர்த்தி, Gravitational pull, self rotation & orbiting around the Sun, stars, galaxy
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன - எண்ணிலடங்கா விண்மீன்களும், கோள்களும் trillions and billions of stars and planets.
இல்நுழை கதிரின் துன்னணுப் புரைய… Like the dust particles in a beam of light passing through a hole in the (tiled) roof.
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகரின் இறையியல் சிந்தனையின் வெளிப்பாடாக இன்றைக்கும் மதித்து ஏற்றுக்கொள்ளக் கூடிய அண்டவியலையும்(Cosmology), வானியலையும்(Astronomy) துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். இறையியல் மூடநம்பிக்கை என்று முழங்குபவர்கள் சிந்தித்துத் தெளிவு பெறுதல் அவசியம்.
No comments:
Post a Comment