1.விக்கிபீடியா :
முழுமையற்ற தன்மையை கொண்ட இயற்கையை போலவே தான் விக்கிபீடியாவும் தினந்தினம் வளர்ச்சி அடைகிறது என்ற செய்தியை ஒளித்து வைத்திருக்கிறது இந்த விக்கிபீடியா 'முழுமை அடையாத உலக உருண்டை' லோகோ..!
2.வியோ :
இந்த லோகோவில் 'வி' (V) மற்றும் 'ஏ' (A) ஏன்ற முதல் இரண்டு எழுத்தும் அனாலாக் சிக்னலை குறிக்கிறது. அடுத்து வரும் 'ஐ' (I) மற்றும் 'ஓ'( O) என்ற எழுத்துக்கள் டிஜிட்டல் பைனரி கோடை (0 மற்றும் 1) குறிக்கிறது.
3.அடிடாஸ்
பார்ப்பதற்கு மலை போன்று காட்சியளிக்கும் அந்த மூன்று கோடுகளும் தடகள வீரர்கள் தங்கள் அடிடாஸ் ஸ்னீக்கர்களை அணிந்து கடினமான போட்டிகளில் பங்கேற்க இயலும் என்று மறைமுகமாக உணர்த்துகிறது.
4.அமேசான்
ஸ்மைலி போன்று காட்சியளிக்கும் அந்த மஞ்சள் நிற அம்பு குறி வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மட்டும் குறிப்பதல்ல A முதல் Z வரை அனைத்தும் கிடைக்கும் என்ற மறைமுக அர்த்தம் உடையது...
5. பாஸ்கின் ராபின்ஸ்:
B R என இருக்கும் லோகோ பாஸ்கின் ராபின்ஸை மட்டும் குறிக்கவில்லை. பின்க் நிறத்தில் 31 என அவர்கள் வழங்கும் ஐஸ்க்ரீம் ஃப்ளேவர்களின் எண்ணிக்கையையும் குறிக்கும்.
6.ஹூண்டாய்:
மேலோட்டமாக பார்த்தால் H என்ற எழுத்து தான் தெரியும். உற்று பார்த்தால் இருவர் (அதாவது விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர்) கை குலுக்குவது போல் இருக்கும்... இது அவர்கள் வாடிக்கையாளர்கள் சேவையை மறைமுகமாக உணர்த்துகிறது..
7.ஜில்லெட்:
ரேசர் நிறுவனமான ஜில்லெட்டின் லோகோவை உற்று பார்த்தால், Gமற்றும் I எழுத்துகள் மேல் செங்குத்தான வெட்டு ஒன்று இருக்கும். இது அந்நிறுவன ப்ளேடின் கூர்மையை பறைசாற்றுகிறது.
8.யூனிலிவர்:
பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் யூனிலிவர், U என்ற லோகோவில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
9.பின்டெரஸ்ட்:
நமக்கு ஆர்வமுள்ள, பிடித்த விஷயங்கள் பற்றி அறியவும் அதை ஒரு பலகையில் சிறு காகிதத்தில் எழுதி குத்திவைப்பதைப் போன்ற வசதி செய்து தரும் செயலியான பின்டெரெஸ்டின் P என்ற எழுத்து,பலகையில் குத்தும் பின்னை உணர்த்துகிறது .
10. எல். ஜி. :
எல். ஜி. நிறுவன லோகோ அந்த இரண்டு எழுத்துகளை மட்டும் குறிப்பதல்ல அவற்றின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இமோஜியை மறைமுகமாக உருவாக்கியுள்ளனர்.
11.கோகோ கோலா:
கோலாவின் 'ஓ' இல் மறைக்கப்பட்டுள்ளது டென்மார்க் கொடி. இது லோகோ அமைத்தவர்களின் ஆரம்ப நோக்கம் அல்ல. ஆனால் கோகோ கோலா அதன் லோகோவின் ஒரு பகுதி டேனிஷ் கொடி போல் இருப்பதைக் கண்டுபிடித்தவுடன், டென்மார்க்கின் மிகப்பெரிய விமான நிலையத்தில் வாடிக்கையாளர்களை கொடிகளுடன் வரவேற்கும் ஒரு ஊடக ஸ்டண்டை அமைத்தனர்.
No comments:
Post a Comment