Pages

Thursday, 5 November 2020

சோழ மன்னர்களின் அறியப்படாத உண்மைகளும் , வரலாறும்



பிற்கால விஜயாலய சோழ வம்சத்தில்( கி பி 850 முதல் 1279 வரை )வந்த மன்னர்கள் தாங்கள் ஆட்சியின் போதே தகுதியான வாரிசுக்கு இளவரசு பட்டம் சூ ட்டிவிடுவர். இதனால் வாரிசு போர் தவிக்கப்பட்டது.

மன்னர் அல்லது இளவரசர் நேரடியாக போரில் கலந்து கொள்வார்கள். பலர் போரில் வீர மரணம் அடைந்தது உண்டு. ராஜேந்திர சோழரின் இரு மகன்கள் சாளுக்கியருக்கு எதிராக போருக்கு சென்றதில் ஒருவர் இறக்க (யானை மேல் துஞ்சிய தேவர் )மற்றவர் பொற்கள த்திலே முடி சூடி கொடிகொண்ட நிகழ்வும், அந்த போரை வெற்றிகரமாக நடத்தி முடித்து பலமான சாளுக்கியரை தோற்கடித்த ஆளுமையும் உண்டு.

பல தடவை இளைய சகோதரர்கள் அமைதியான முறையில் இளவரசு பட்டம் கட்டப்பட்டு அண்ணனுக்கு பின் அரியணை ஏறியது உண்டு. அருண்மொழி வர்மனாகிய ராஜராஜ சோழன் தனது சித்தப்பாவிற்கு (உத்தமசோழன் )அரியணையை தனது தந்தைக்கு பின் விட்டுக்கொடுத்தாக தனது கல்வெட்டில் பொறித்துள்ளார். குலோத்துங்க சோழன் கீழை நாடுகளில் தூதுவராக, அரச பிரதிநிதியாக பணியாற்றினார்.இரண்டு முறை சீன அரசருக்கு அரச தூதுவர்களை அனுப்பினார் என்ற விபரம் சீன நாட்டு பதிவுகளில் உண்டு.

சோழர்கள் முடிந்தால் பக்கத்து நாட்டை வெல்வார்கள் அல்லது தகுதியான இளவரசர்கள் இருக்கும் பட்சத்தில் தமது இளவரசியை அந்த நாட்டின் மன்னர் அல்லது இளவரசருக்கு மணமுடித்து கொடுத்து அந்த நாட்டை கீழை சாளுக்கிய நாட்டை போல தமது பெரும்படையை அங்கு நிறுத்தி அந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைப்பார். பழுவேட்டரையர் (கேரளா பகுதி )இருங்கோவேள், வேளிர் நாடு போன்ற சிறு நாட்டு இளவரசிகளை மணந்து கொண்டு அந்த மன்னர்களை தமது முக்கிய தளபதிகளாக (மகா சேனாதிபதி )வைத்து கொள்வதும் உண்டு.

சோழரின் மண த்தொடர்பு ஆந்திரா, வங்காளம் வரையிலும் விரிந்தது, அதனால் தெலுங்கு சோழர்முதலிய வம்சங்கள் உண்டாயின. கிழக்கே கடல் கடந்து கடாரம், தாய்லாந்து, வியட்நாம், பிலிபின்ஸ் போன்ற நாடுகள் வரை சோழ மரபு அல்லது கலப்பு மரபு உண்டாயின. அவர்கள் தமிழ் மக்களை அனைவரையும் பல நாடுகளில் குடியேற்றினார்.அவரின் காலத்தில் சீனாவில் கண்டன் துறைமுகம் அருகில் 12 சிவன் கோவில்கள் தமிழ் வணிகர்களால் கட்டப்பட்டது.தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் இன்றும் தேவாரம், திருவாசகம் பாடப்படுவது சோழரின் அரச தொடர்பே. அந்த மன்னர் முதன் முதலில் ஏர் பிடித்து வயலில் உழுது விவசாய வேலைகளை தமிழர் போல தொடங்கி வைப்பார், பாரம்பரிய ஊஞ்சல் ஆடுவார்.தாய்லாந்து நாட்டு பிராமணர்கள் இன்றும் தமிழ் பக்தி பாட்டுகளை அர்த்தம் தெரியாமலேயே பாடிக்கொண்டு இருகின்றனர்.

சோழரின் கடற்படை தற்போதைய ஒரு வல்லரசின் படை போல பல தொழில் நுட்ப பிரிவு, தளபதிகள், பல்வேறு அதிகாரிகள் , (divisions of labour, supply line)உள்ள பெரும் கடற்படை யாகும். சோழரின் சிறிய கப்பல் ஒன்று பூம்புகார் கடலில் உடைந்த நிலையில் மீட்கப்பட்டு நமது கடற்படையால் மீண்டும் அதன் மாதிரி மீண்டும் உருவாக்கப்பட்டு திருநெல்வேலி மத்திய அரசு அருங்காட்சி அகத்தில் (வண்ணாரப்பேட்டையில் ) உள்ளது.அதனால் தான் திரு மோடி, சோழர் கடல் வலிமையை பாராட்டினார்.

சூளாமணி விகாரம் நாகப்பட்டினத்தில் ராஜராஜ சோழன் அனுமதியுடன் ஸ்ரீ விஜய மன்னர் தனது தந்தை சூடாமணி நினைவாக புத்தருக்கு கட்டினார். அதற்கு ஆனைமங்கலம் என்ற ஊர் தானமாக அளிக்கப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் சீனா வணிகத்திற்கு இடையூறு செய்ததால் ராஜேந்திரன் காலத்தில் ஸ்ரீ விஜயம் மீது போர் தொடுக்க பட்டது.

ராஜராஜன் அண்ணன் ஆதித்திய கரிகாலனை(வீரபாண்டியன் தலை கொண்டவர் என்ற பட்ட பெயர் உடையவர் ) கொலை செய்ய தூண்டியது யார் என தெளிவாக தெரியவில்லை. நான்கு பிராமண சகோதர்கள் இரு முடிசோழ ப்ரமாதிராஜன், சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் போன்ற உயர் அரச அதிகாரிகள் மட்டுமே நாடு கடத்தப்பட்டு தண்டிக்க பட்டனர். இந்த கொலைகாரர்கள் சோழ நாட்டில் உள்ள ஒரு பிராமண கிராமத்தில் ( ஸ்ரீ பராந்தக வீர நாராயண சதுர்வேதி மங்கலம் ) (உடையார்குடி )அடைக்கலம் ஆக ராஜ ராஜ சோழனால் அவர்களை நேரிடையாக தண்டிக்க முடியவில்லை. ( அரசனினின் ஆளுகை இல்லா கிராமம் )எனவே அந்த பிராமண கிராம சபையோருக்கு அவர்களை தண்டிக்குமாறு கடிதம் எழுத அவ்வாறே அவர்களின் சொத்து பறிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது. கிடைத்த அந்த தொகையை கோவிலுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் முதுகில் துரோகி என பச்சை குத்தப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். (கொலையாளிகள் பார்ப்பனர் என்பதால் பெரிய தண்டனை ஏதும் இல்லை ). இந்த செய்தி ராஜராஜனின் ஊழியன் கஜமல்ல பல்லவராயன் வெட்டிய (இவர் தான் மேற்கண்ட நிலத்தை ஏலம் எடுத்தவர் ) உடையார்குடி கல்வெட்டில் உள்ளது. செய்தி படி கொலையாளிகள் சோழ ராஜ்யத்தில் ப்ரமாதிராஜன் என்ற பட்டத்துடன் உயர் பதவியில் இருந்ததாக தெரிகிறது.

சோழ நாட்டில் சுமார் 500 கும் மேற்பட்ட வரிகள் சாமானிய மக்கள் மீது விதிக்கப்பட்டு கடுமையான முறையில் வசூலிக்கப்பட்டது (வரி செலுத்தாதோர் முதுகில் கனமான கல் ஏற்றி வெயிலில் நிறுத்தல், கசையடி முதலியவை வீட்டு பொருட்க்களை ஜப்தி செய்தல் ), பிராம்மணர் மீது பொதுவாக வரி வசூலிக்கப்படுவதில்லை. திறை, வெட்டி ( வேலை செய்து கொடுத்தல் )ஆகியவை முக்கியம். சோழர் ஆட்சியின் கடைசி 100 வருடங்கள் வாரிசுமையால் மக்கள் கிளர்ந்து எழுந்தனர், சோழர் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். 13 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பிராம்மணர் அல்லாதோர் நடத்திய சைவ மடங்கள் இடித்து அழிக்க பட்டன. சோழர் வீழ்ச்சி அடைவதற்கு இதுவும் முக்கிய காரணம் ஆகும். இது குகை இடி கலகம் எனப்படும். இதனால் இரண்டாம் நிலையில் இருந்த வெள்ளாளர்கள் சோழர்களை வெறுக்க ஆரம்பித்தனர். பிராமணர்களின் இன நன்மையை மட்டும் பேணி காப்பாற்றிய பின்னால் வந்த சோழர்களை எல்லா மக்களும் கைவிட்டனர். கைக்கோளர், கள்ளர், மறவர் சாதியில் பெரும்பகுதியினர் நெசவுக்கும், விவசாயத்திற்கும் மாற்றப்பட்டனர். (முதலில் உள்ள சோழ மன்னர்கள் ராஜராஜன் காலம் முதல் கைக்கோளர் மகாசேனை சோழர் படையில் முக்கிய அங்கமாக இருந்தது )பார்ப்பனர்களும் தங்கள் ஆதரவை பாண்டிய பேரசுக்கு மாற்றிகொண்டனர் . சோழர்கள் தனித்து விடப்பட்டனர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரபாண்டியன் மனைவியை கவர்ந்து கொண்டதால் பின்னால் பாண்டிய அரியணை ஏறிய சுந்தரபாண்டியன் கோபமுற்று சோழ நாட்டின் மீது படை எடுத்து வென்ற பொது சோழ நாட்டில் உள்ள அனைத்து கோட்டைகள் அரண்மனைகள் ஆகிவற்றை இடித்து தள்ளினான்.இதில் கரிகாலன் உருத்திரம்கண்ணருக்கு வழங்கிய மணி மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டுவைத்தான்.

கடைசி சோழ அரசர் மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டியரிடம் தோல்வியுற்று தப்பி செல்லமுன் வழியில் கோப்பெரும்சிங்கன் என்ற குறுநில மன்னரால் சிறை பிடிக்கப்பட்டார். மாபெரும் சோழ சக்கரவர்த்திவழி வந்தவர் ஒரு குரு நில மன்னரால் (காட

க மன்னன் )சிறை பிடிக்கப்பட்ட அவமான நிகழ்வும் நடந்தது. அதன் பின்னர் 13 நூற்றாண்டு மத்தி முதல் சோழர் பற்றிய விபரம் கிடைக்கவில்லை.

கே கே பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் எழுதிய சோழர் வரலாற்றை அரசு நூலகம் சென்று படிக்கலாம்.

இந்திய வரலாறில் கடல் கடந்து இந்தியா /தமிழர் பண்பாட்டை, இந்து மதத்தை பரப்பியதில் சோழருக்கு தான் முதலும், கடைசியும் ஆன பெரும் பங்கு உண்டு, ஏனோ சோழரின் வரலாறு அகில இந்திய அளவில் பள்ளி, கல்லுரிகளில் பாடமாக வைக்கப்படுவது இல்லை.


No comments:

Post a Comment