Pages

Monday, 9 November 2020

தியானம் என்பது தூய தமிழ் என்ன ????

 

தியானம் என்பது தமிழ் சொல் அல்ல. அது ஒரு வடமொழி சொல். அதற்கு இணையான தமிழ் சொல் அகத்தவம்.

முதலில், தியானம் என்பது எங்கு வருகிறது என்று பார்ப்போம்.

பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம்;

படிமப்புரவு ;Light of the Soul, Patanjali’s Yoga Sutras: book 4 sutras 18-27

பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அத யோகானு சாஸனம்

யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத; - யோக சூத்திரம்

புற உலகில் பற்றுடன் அலையும் மனதைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவுடன் இணைத்தலே யோகம். யோகம் என்றால் இணைத்தல், ஒன்றுபடுதல், சேர்த்தல் என்று பொருள். அதாவது, ஜீவாத்மாவான மனிதனை , பரமாத்மாவான இறைவனுடன் இணைப்பது யோகம் எனப்படும்.

படிமப்புரவு: Chakras

யோக சூத்திரத்தில், யோகத்திற்கு எட்டு அங்கங்கள் குறிப்படப்பட்டு உள்ளன. அதாவது, அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.

  1. இயமம் (ஒழுக்கம்)
  2. நியமம் (நியதிகள்)
  3. ஆசனம் (இருக்கை நிலைகள்)
  4. பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு)
  5. பிரத்தியாகாரம் (பற்றற்ற நிலை)
  6. தாரணம் (ஒரு நிலைப்படுத்துதல்)
  7. தியானம் (அகத்தவம்)
  8. சமாதி (பரம்பொருளுடன் இணைதல்)

எனவே, படிப்படியாக இறைவனை அடைவதற்கான வழியினை யோக சூத்திரம் கூறுகிறது. தியானம் என்பது அஷ்டாங்க யோகத்தில், ஏழாவது நிலையில் உள்ளது.

எட்டு அங்கங்களில், இரண்டு வகைகள் உள்ளன.

  1. புறத்தே செய்வது, வெளிப்புறமாக செய்வது ;(பஹிர்முகம் எனப்படும்)

முதல் நான்கு வகைகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் போன்றவை வெளிப்புறமாக செய்யப்படுபவை

2. அகத்தே செய்வது, மனதால் செய்வது ; (அந்தர்முகம் எனப்படும்)

அடுத்த நான்கு வகைகளான பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி போன்றவை மனதால் செய்யப்படுபவை.

புற சுத்தங்களுக்குப் பிறகு, அக சுத்தங்களை நோக்கி, மனிதன் பயணிக்கிறான்.

இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  1. இயமம்; (ஒழுக்கம்)

ஐந்து சுயக்கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.

  1. எவரையும் காயப்படுத்தாமை
  2. உண்மையாக இருத்தல்
  3. களவாடாமை
  4. ஆன்மிக இயல்
  5. பேராசை இல்லாமை

2. நியமம்; (நியதிகள்)

ஐந்துக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.

  1. மனத்தூய்மை
  2. மன நிறைவு
  3. எளிமை
  4. தன்னறிவு
  5. இறைபற்று

3. ஆசனம்; (இருக்கை நிலைகள்)

உடல் நலத்தை பேணும் ஆசனங்கள் இவற்றில் உள்ளடங்கும். யோகாசனங்கள் எல்லாம் இதனுள்ளே வருகின்றன. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல், உடல் நலத்தை பேணுவதற்கு ஆசனங்கள் உதவுகின்றன.

4. பிராணாயாமம்; (மூச்சுக் கட்டுப்பாடு)

இவற்றில் மூச்சைக் கட்டுப்படுத்துதல் மூலமாக, மனதை அமைதிப்படுத்துதல்.

5. பிரத்தியாகாரம்; (பற்றற்ற நிலை)

புறத்தே அலையும் மனதை உள்நோக்கி திருப்புதல். மனதை புலன்வழி செல்லாது கட்டுப்படுத்துதல்

6. தாரணம்;(ஒரு நிலைப்படுத்துதல்)

அலைபாயும் மனதினை ஒரு நிலைப்படுத்துதல்

7. தியானம்; (அகத்தவம்)

மனதை மனதின் மூலமான உயிரின் மீது செலுத்தி அல்லது இறைவனின் அம்சம் மீது செலுத்தி, அறிவின் நிலைக்கு(இறைநிலைக்கு) உயர்த்துதல்.

8. சமாதி;(பரம்பொருளுடன் இணைதல்)

இறைநிலையோடு ஒன்றி கலந்து இருப்பது. இதுவே யோக நெறியின் இறுதிப்படி.

இறைவனை அடைவதே மனிதப் பிறவியின் குறிக்கோள். இறைவனை உணர, இறைவனை அடைய தியானம் அல்லது அகத்தவம் உதவுகிறது.

No comments:

Post a Comment