Pages

Monday, 9 November 2020

பண்டைய தமிழர்களின் அறிவியல் தலை சிறந்தது.

 பண்டைய தமிழர்கள் அதாவது நம் முன்னோர்கள் அறிவாளிகள் தான் என்று நிருபிக்க இதை விட சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு வேறு எதுவும் இருக்காது.

அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

காலம் காட்டும் கல்

  • கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குலமே என்பதற்கு இது ஒரு சிறந்ததொரு உதாரணம்.
  • பல்லாயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உண்டு என்பதால் தமிழரின் கண்டுபிடிப்புகள் மனிதரின் நாகரிக வளர்ச்சியில் தமிழரின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
  • இதில் மிக மிக முக்கியமான ஒன்று நம் முன்னோர் கண்டுபிடித்த காலம் காட்டும் கல். இதனை மணிகாட்டிக் கல் என்றும் அழைப்பர்.
  • அறிவியல் வளராத காலத்தில் கூட சூரியனை எந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தவர்கள் தமிழர்கள்.
  • மேலை நாட்டினர் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தை அறிந்து கொண்டனர்.
  • மேலை நாட்டினர் மண்ணை பார்த்து சிந்தித்த தருணத்திலேயே நாம் விண்ணைப் பார்த்து சிந்தித்து உள்ளோம்.
  • அன்றே தமிழர்கள் சூரியனை பார்த்து நேரம் கணித்தனர் சூரியனை கடிகாரமாக பயன்படுத்தி உள்ளனர் என்பதும் உண்மை.
  • கோயில் கோபுரத்தையும் சூரியனையும் வைத்து நேரத்தை அறிந்துக் கொண்டிருந்தனர். பின் சிறிய கருங்கல்லை வைத்து தன் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.
  • சிறிய கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணி நேரத்தை பார்க்கும் படி வடிவமைத்துள்ளனர்.
  • நான் மேற்கூறியது போல விரிஞ்சிபுர கோயில் ஆலயத்தின் வடக்கு பகுதியில் காலம் காட்டும் கல்லை பல்லவ மன்னர்கள் அன்றே கட்டியுள்ளனர்.
  • மணி காட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று அமைந்திருக்கும். அதன் மேல் சிறு குச்சி ஒன்று வைத்தால் சிறிய ஒளியின் திசைக்கு ஏற்றாற்போல் குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்ட கோட்டின் மீது விழும் அதை பார்த்து நாம் மணியை தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த ஒரு சான்று போதும். தமிழர்கள் அறிவியலில் எப்படி மேம்பட்டவர்கள் என்று இந்த பதிவு தெளிவாக எடுத்து காட்டுகிறது.

இந்த தகவல்களை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.அஜய் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

No comments:

Post a Comment