ராவுத்தர்கள் பற்றிய வரலாறு என்ன?
இராவுத்தர்
தென்னாட்டு முகம்மதியர்களுள் ஒரு சாரார் இராவுத்தர் என்னும் பட்டப்பெயரை உடையவர்களாக இருக்கின்றனர். இப்பெயர் சில பழைய தமிழ் நூல்களிலும் சில சாஸனங்களிலும் காணப்படுகிறது. தமிழ் நூல்களிலுள்ள பிரயோகங்களைப் பார்க்கும் போது இச்சொல் குதிரையை அடக்கி யாண்டு செலுத்தும் வீரரென்னும் பொருள்படுகின்றது. வேறு இடங்களிலுள்ள பிரயோகங்கள் இது சிறந்த நிலையிலுள்ளவர்களாற் கொள்ளப்படும் பட்டப்பெயரென்பதைப் புலப்படுத்துகின்றன.
பழைய திருவிளையாடலிற் கண்ட செய்திகள்
பெரும்பற்றப்புலியூர் நம்பி யென்னும் புலவர் பெருமான் இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இச்சொல் மூன்று இடங்களில் வந்துள்ளது. மாணிக்க வாசகருடைய அன்புக்கு இரங்கிய சிவபெருமான் அவர் பொருட்டாகப் பாண்டியனுக்குக் குதிரைகளை அளிக்க வந்தாரென்னும் வரலாற்றைச் சொல்லும் பகுதி ஒன்று அப்புராணத்தில் உண்டு. அக்கடவுள் தாம் கொணர்ந்த பரிகளைப் பாண்டியன் பால் ஒப்பித்ததற்கு அறிகுறியாகக் கயிறு மாறின செய்தியை,
“ஐயமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாள்
துய்யபே ருலகுக் கெல்லாந் துளங்கிரா வுத்த ராயன்
மெய்யைமெய் யுடைய மெய்யன் மெய்யடி யானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான்”
என்று ஆசிரியர் கூறுகிறார். இதில், ‘துய்ய பேருலகுக் கெல்லாந் துளங்கி ராவுத்தராயன்’ என்று குதிரை வீரராக வந்தவரை இராவுத்த ராய னென்பது இராவுத்தர்களுக்குத் தலைவனென்று பொருள்படும். பல குதிரைகளோடு வந்தாரென்பது வரலாறாதலின் அக்குதிரைகளை நடத்தும் இராவுத்தர்களுக்கு அவர் தனித் தலைவரானார். சிவபக்தராகிய புலவர் ஒருவரால் தம்முடைய வழிபடு கடவுளைக் குறிக் கையில் இராவுத்தராயனென்ற சொல் வழங்கப் படுதலின் இச்சொல் மதிப்புடையதாகவே இருக்க வேண்டும். பின்னும், குதிரைகளைப் பெற்றுக்கொண்ட பாண்டிய மன்னன் அவற்றை யளித்தவருக்கு வரிசை வழங்க வேண்டுமென்றெண்ணி ஓரழகிய ஆடையை அளித்தா னென்பதை ஆசிரியர்,
“இந்நெறி மன்னர் மன்னன் இனிமைகூர்ந் திராவுத் தற்கு
நன்மைகூரு வரிசைத் தூசு நல்குவ மென்று நல்க”
என்று சொல்கிறார். இங்கே குதிரை வீரராக வந்த கடவுளை ‘இராவுத்தன்’ எனக் குறிக்கின்றனர்.
இப்புராணத்திலே சோழனைக் கொண்டாழியிற்றாழ்த்த திருவிளையாடலென்னும் ஒரு வரலாறு உண்டு. பக்தனாகிய ஒரு பாண்டியன் பொருட்டு அவன் பகைவனாகிய சோழனொருவனைச் சிவபிரான் குதிரைவீரராக வந்து கொண்டாழியென்னும் ஒரு வகை நீர்நிலையில் ஆழ்த்தினாரென்ற செய்தி அதிற் சொல்லப்படுகிறது:
“துன்று பல்படைச் சோழனை யாழ்த்திய
கொன்றை மாலைக் குதிரை யிராவுத்தன்
வென்றி நீள்குரல் காட்டி விளங்குபொன்
மன்று ளாலயம் புக்கு மறைந்தனன்”
என்பது அதில் உள்ள ஒரு செய்யுள். இதன் கண், சோழனை ஆழ்த்திய குதிரை வீரராகிய சிவபிரான் ஆலயத்துள் மறைந்தாரென்று காணப்படுகிறது. இங்கே குதிரை இராவுத்தனென்னும் சொல் குதிரை வீரனென்னும் பொருளிலேயே வழங்கப்பட்டிருத்தல் காண்க.
திருப்பெருந்துறைப் புராணம்
திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாக இருந்த ஸ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவரென்பவரால் இயற்றப் பெற்ற பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்க வாசகர் பொருட்டுச் சிவபிரான் குதிரைவீரராக வந்த செய்தி அமைந்துள்ள,
“கோட்டமில் லாமா ணிக்கவா சகர்முன்
குதிரை ராவுத்தனாய் நின்று
வாட்டமில் லாத்தன் கருணையா ரமுதம்
வளர்பெருந் துறையரன் புரிந்து”
என்னும் ஒரு செய்யுள் காணப்படுகிறது. இதன் கண்ணும் குதிரை ராவுத்தன் என்ற சொல் வந்துள்ளது. இவ்வரலாற்றிற்கு அறிகுறியாகத் திருப்பெருந்துறைச் சிவாலயத்தில் குதிரை ஸ்வாமி மண்டபம், அல்லது குதிரை ராவுத்தர் மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளது. அங்கே சிவபிரான் குதிரைவீரராக உள்ள திருவுருவம் ஒன்று விளங்குகிறது.
கந்தரலங்காரம்
கந்தரலங்காரத்தில் முருகக்கடவுளை அருணகிரி நாதர்,
“மாமயி லேறு மிராவுத்தனே”
என்று துதிக்கின்றார். மயிலைக் குதிரையாக வைத்து அதனை நடத்தும் முருகக்கடவுளைக் குதிரைவீரரென்பார் இராவுத்தனென்றார். “வாசுகி எடுத்துதறும் வாசிக் காரனும்” என்று அவரே வேறிடத்தில் மயிலைக் குதிரை யாகக் கூறுவர்.
விறலிவிடு தூது
கூளப்ப நாயகன் விறலிவிடு தூதில்,
“இராவுத்தர், கைக்குளடங் காதுபரி கான்மீற”
என ஒரு பகுதி உள்ளது. அதில் இராவுத்தரென்பது குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவரென்னும் பொருளில் வந்தது.
குதிரை யேற்றம்
முற்காலத்தில் குதிரையைச் செலுத்தும் ஆற்றல் மிக உயர்வாகக் கருதப்பட்டு வந்தது. பஞ்சபாண்டவர்களுள் ஒருவனாகிய நகுலனும் நளச் சக்கரவர்த்தியும் குதிரையேற்றத்திற்கு சிறந்தவர்கள். அறுபத்து நான்கு கலைகளில் குதிரையேற்றமும் ஒன்றாகும். குதிரையைச் செலுத்தும் வீரம் குதிரை மறம், குதிரைவென்றியென்னும் புறப்பொருட்டுறைகளில் பாராட்டப் படுகின்றது. சேரமான் செல்வக் கடுங்கோவாழி யாதனென்னும் அரசனது கையைச் சிறப்பிக்கவந்த கபிலரென்னும் பொய்யா வாய்மொழிப் புலவர் பெருமான், ‘அகழியின்கண் விழாமல் தடுக்கும் பொருட்டு குதிரையை வேண்டுமளவிலே பிடிக்கும் வலிமையையுடையன நின் கைகள்’ என்னும் பொருளமைய,
“பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை” (புறநானூறு)
என்கிறார். இதனாற் குதிரையை அடக்கிச் செலுத்தும் வீரம் மிகவும் உயர்வுடையதென்பது பெறப்படுகின்ற தன்றோ?
“உருவகக் குதிரை மழவர்”
என ஒருவகைக் குதிரைவீரர்களை அகநானூற்றால் அறிய லாம்.
குதிரையைச் செலுத்தும் பேராற்றலை உடையவரென்று அரசர் முதலியோர் சிறப்பிக்கப்படுதல் தொன்று தொட்ட வழக்கம். அவ்வீரத்தாற் பெறப்படும் இராவுத்த என்னும் சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் அரசர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் உடையவர்களாயினர்.
சாஸனங்கள்
திருவானைக்காவிலுள்ள * ஒரு சிலாசாஸனத்தில், ‘ராஹுத்த ஜாஜல தேவர்க்கு’ என்ற தொடர் காணப்படுகிறது. ஜாஜல தேவரென்பவர் ‘ஸௌபாண குல திலகர்’ என்று சிறப்பிக்கப்படுகிறார்.
————–
* South Indian Inscriptions, Vol. V Page, 428.
பெயர் விளக்கம்
ராஹுத்தரென்பது ராவுத்தரென்பதன் திரிபேயாகும். அம்மன்னர் அப்பெயருடையராக இருத்தல் அப்பட்டம் அரசர்களா லும் மேற்கொள்ளப் பெறுவதைப் புலப்படுத்துகின்றது. கோயம்புத்தூர் ஜில்லா ஈரோட்டிலுள்ள *சாஸன மொன்றில் ‘மகா மண்டலேச்வரன்…பர்வத ராவுத்தர்’ என ஒரு சிற்றரசன் பெயர் உள்ளது. இங்ஙனமே, + உதயகிரி யென்னும் இடத்திலிருந்த அரண் காவற்றலை வனாகிய திருமலை ராவுத்தராயனென்னும் அதிகாரி யொருவனும், ஹொய்சள அரசராகிய இராமநாத தேவ ரென்பவரால் விருத்திபெற்று வாழ்ந்த இராவுத்தராய னென்ற ஓர் அதிகாரியும் இப்பெயரை உடையவர்களாக இருந்ததைச் சிலாசாஸனங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு நாட்டிலுள்ள ஆமூரென்பது இராவுத்த ராய நல்லூரென்னும் பெயருடையதென்று தெரிகிறது. கள்ளக்குறிச்சி தாலுகாவில் இராவுத்த நல்லூ ரென் னும் ஊரொன்றுண்டு. ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் அரசர், சிறந்த அதிகாரிகள் முதலியவர்களுடைய பெய ரால் வழங்கப் பெறுதல் வழக்க மாதலின் மேற்கூறிய ஊர்ப்பெயர்களால் அறியப்படும் இராவுத்தராயர், இராவுத்தரென்பன சில சிற்றரசர் அல்லது அதிகாரிகளையே குறிப்பனவாகக் கொள்ள வேண்டும்.
இதுகாறுங் கூறிய இலக்கிய வழக்காறுகளாலும் சாஸன வழக்காறுகளாலும் இராவுத்தரென்பது அரசர் களும் சிற்றரசர்களும் அதிகாரிகளும் வீரர்களும் புனையும் சிறப்புப் பெயரென்பது அறியப்படும்.
———
* South Indian Inscriptions 169, of 1910.
+ Ibid. 80 of 1911.
++ S.I. Inscriptions, 414 of 1913
$ I bid, 588 of 1905.
“ரவுத்“
பலிஜவாரு என்னும் ஜாதியினருள் ஒரு சாரார் ‘ரவுத்’ என்னும் குடிப்பெயருடையவராக இருக்கின்றனர். அவர்கள் பாளையக்காரர்களிடம் போர் வீரர்களாக இருந்தமையின் அப்பெயருடையராயினர் என்று சிலர் கூறுகின்றனர். இங்ஙனமே மைசூர் அரசர்கள் பால் போர்வீரர்களாக இருந்தவரென்று கூறப்படும் கன்னடி யர்களிற் சிலர் ‘ரவுத்’ என்னும் மரபுப்பெயர் கொண் டிருக்கின்றனர். ரவுத்தென்பது வீரத்தொடர்புடைமையை இவை புலப்படுத்தும். ரவுத் என்பதும் ராவுத்த ரென்பதும் ஒரே பெயரின் திரிபுகளென்பர்.
பெயர் காரணம்
ராவுத்தர் என்பது முஸ்லிம் வீரர்களை அதிகமாக குறிக்கின்றது. சில வடமொழியறிஞர்கள் ராஜபுத்திரர் ( Rathore ) என்பதன் சிதைவாக இருத்தல் கூடுமென்று எண்ணுகின்றனர். ‘ ரா ‘ என்பது குதிரையைப் புலப்படுத்தும் சொல் லென்றும் அதனடியாக இச்சொல் பிறந்திருக்குமென்றும் சிலர் ஊகிக்கின்றனர். இப்பெயரின் காரணம் யாதாயினும் இது வீரத்தைப் புலப்படுத்துவதென்பதில் மாறுபாடு ஒன்றும் இல்லை.
வீரர்களுக்குரிய சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகிய இராவுத்தரென்னும் இது முகம்மதியர்களுள் ஒரு சாரார்க்கு அமைந்ததற்குரிய வரையறையான காரணம் அவர்களின் வீரம். ஆயினும் எனக்குத் தோற்றும் காரணம் ஒன்றை இங்கே கூறுகிறேன்.
பண்டைக்காலம் தொடங்கித் தமிழ் நாட்டில் அரசர்கள்பால் வேற்று நாட்டு வீரர்கள் இருந்து பலவகை யான உதவிபுரிந்து வாழ்ந்து வந்தனர். குதிரை வீரர்களாக இருந்தவர்களிற் பலர் வேற்று நாட்டார்களே.
சீவகசிந்தாமணியாலும் பெருங்கதை முதலியவற்றாலும் வேறு பாஷையைப் பேசும் பிறநாட்டு வீரர்கள் குதிரைகளைச் செலுத்தினார்களென்ற செய்தி தெரிகிறது. பட்டினப்பாலையினாலும் வேறு சில நூல்களாலும் துருக்கிய பாரசீக நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் குதிரைகள் கப்பல்களில் வந்து இறங்கினவென்று அறியலாம். முகம்மதியர்களுக்குரிய நாடாகிய அரபி(பாரசீக) நாட்டில் சிறந்த பலவகைக் குதிரைகள் உள்ளனவென்பதும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதில் துருக்கியர்கள் இணையற்றவர்களென்பதும் உலகமறிந்த செய்திகள். ஆதலின் அந்நாட்டிலிருந்து இந்நாட்டுக்குக் குதிரைகள் வந்தகாலத் தில் அவற்றுடன் குதிரை வீரர்களும் வந்தனரென்றும் அவர்களை இராவுத்தரென்ற பெயரால் தமிழ் நாட்டினர் அழைத்தனரென்றும் கொள்ளலாம். அங்ஙனம் வந்த இராவுத்தர்கள் முகம்மதியர்களாதலின் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிற்காலத்தில் இராவுத்தர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டனர். உடையார் பாளையம் முதலிய சமஸ்தானங்களில் குதிரைகளைப் பாதுகாக்கும் பணியை இன்றும் முகம்மதியர்களே செய்து வருகின்றனர்.
சிவபிரான் குதிரைவீரராக வந்து திருக்கோலத்தை வருணிக்கையில் திருவாதவூரர் புராண ஆசிரியராகிய கடவுண்மாமுனிவர்,
“ஒப்பரிய சட்டையு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலுக்கமு ராகி”
வந்தாரென்கிறார். அந்த இராவுத்தத் திருக்கோலத்திலுள்ள சட்டையும் இடைப்பட்டும் தொப்பியும் தென்னாட்டு முகம்மதியர்கள் உடைகளை நினைப்பிக் கின்றன.
முற்கூறிய திருப்பெருந்துறைப் புராண ஆசிரியர், பாண்டியன் குதிரை யிராவுத்தரை முதலிற் கண்டவுடன் அதிசயித்து அவரது அழகை நோக்கி,
“…….அன்பாய், ஏலுநன் னுதன்மேற் கைவைத்
தொழிற்சலாம் செய்தல் கண்டு”
“மாறிலாக் கருணைவள்ளல் மன்னன்போற் றாமுஞ் செய்து
தேறுசீ ரருட்கண் ணாற்புன் சிரிப்பொடும் பார்த்த”
தாகக் கூறுகின்றார். குதிரை இராவுத்தருக்குப் பாண்டியன் தன் நெற்றிமேற் கைவைத்துச்சலாம் செய்தானென்று இவ்வாசிரியர் கூறுதல் கருதத்தக்கது. குதிரைவீரராக வந்தவர் முகம்மதியக் கோலத்தோடு வந்தனராதலின் அவருக்கேற்ப அரசன் சலாம் செய்தானென்று ஆசிரியர் அமைத்தனரென்றே கொள்ள வேண்டும். இதனாலும் குதிரை நடத்தும் வீரத்துக்கும் முகம்மதியர் களுக்கும் உள்ள தொடர்பு விளங்கும்.
எனவே, குதிரைகளாற் சிறப்புற்ற நாட்டைத் திசை நோக்கித் தொழும் முகம்மதியர்கள்(துருக்கியர்கள்) குதிரை வீரர்களுக் குரியதாகிய இராவுத்தரென்னும் சிறப்புப் பெயரை உடையராதல் பொருத்தமும் மிக்க மதிப்பும் உடைய தென்பதில் ஐயமில்லை.
- நல்லுரைக்கோவை (Nalluraikkovai Vol.2) உ.வே.சாமிநாத ஐயர், 8.இராவுத்தர்.
குதிரை வணிகம்
* சுல்தான் ஜமாலுதீன் (கி.பி. 1293 -1306)
பாண்டிய சுல்தான் ஜமாலுதீன் அல்லது மாலிக்குல் இஸ்லாம் சுல்தான் ஜமாலுதீன் இராவுத்தர் என்பவர் அரபுலகில்(பாரசீக) இருந்து தமிழகத்தின் காயல்பட்டினத்திற்க்கு வந்த குதிரை வணிக குழுவின் தலைவராவார்.
இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வழித்தோன்றல் என அறியப்படுகிறார். இவர் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர் ஆவார்
பாண்டிய நாட்டின் தூதுவராக சீனம் சென்றிருந்த இவர் வரும் வழியில் மரணமடைந்தார், இவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது
இவரது குடும்பத்தினர் பாண்டியநாட்டின் அரசவையில் செல்வாக்குடன் திகழ்ந்தனர். இவரது ஆட்சிக்காலத்தில் தலைநகரை மதுரையிலிருந்து காயல்பட்டினத்துக்கு மாற்றினார்
*பாண்டிய மன்னர்களின் குதிரை படைக்கு தேவையான குதிரைகளை ஒரு குதிரைக்கு 220 தினார் வீதம் ஆண்டுக்கு ஆயிரத்து 400 குதிரைகளை தருவித்து கொடுத்தார்.
குதிரை வணிகர்கள்
திருநெல்வேலி மாவட்டம், திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.[3] இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்த காரணத்தினாலும், குதிரைகளை போர்ப்பயிற்சிக்கு பழக்குவதற்கு சரியான ஆட்கள் இல்லாத காரணத்தினால், வாணிபத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் நியமித்தனர். முஸ்லிம் வீரர்களின் திறமையையும், வீரத்தையும் கண்ட மன்னர்கள் அவர்களை குதிரைப்படைத் தலைவர்களாகவும் நியமித்தனர்.
முஸ்லிம் குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் ‘பாளையம்’ என்று அழைக்கப்பட்டது.[4] திருப்பெருந்துறை சிவன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்திற்கு குதிரை இராவுத்தர் மண்டபம் என்றும் பெயர்.[3]
கள்ளக்குறிச்சியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலின் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரனின் சிலை உள்ளது அதன் பெயர் முத்தியாலு ராவுத்தர். சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும், அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர்.[5] திருமண உறவுகளை கொண்டனர். இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.
பாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்
மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இராவுத்த குதிரை வீரர்கள் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. “அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்“. பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.
மதநல்லினக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ராவுத்தர்கள்
முஸ்லீம் ராவுத்தர்களை குல தெய்வமாக வணங்கும் இந்துக்கள்…
மத நல்லிணக்கத்திற்காக முன்னுதாரணமாய் திகழும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமுதாயம்.
ஆங்கிலேயரை எதிர்த்த திப்புசுல்தானோடு இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்டு வென்ற தீரன்சின்னமலை ஒரு சுதந்திர போராட்ட வீரனாக அறியப்படுகிறார் என்றால் அதைவிட ஒரு படி மேலாக இஸ்லாமிய பெரியவரை குலதெய்வமாக்கி வணங்கி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்.
ராவுத்தர் குமாரசாமி கோயில்
இந்த கோவிலை ஈரோடு மாவட்ட & சுற்றுவட்டார மக்கள் நன்கு அறிவார்கள்.
ஈரோடு சிவகிரி அருகே இருக்கிறது காகம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் குல தெய்வத்தின் பெயர் ராவுத்தர் குமாரசாமி. கொங்கு மண்டலத்திற்கு அடையாளமாக பல திருத்தலங்கள் இருந்தாலும் ஒருபடி மேலாகத்தான் தெரிகிறது மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழும் இக்கோவில் தனிச்சிறப்புதானே.
காகம் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தின் உட்பிரிவான கண்ணங்கூட்டாத்தாரின் குலதெய்வம்.
இந்தக் கோவிலின் கருவறையின் முன்பு ராவுத்தர் சிலை உள்ளது.கருவறையில் உள்ள குமாரசாமி சிலைக்கு முன்பாக ராவுத்தர் சிலையை அமைத்திருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கண்ணங்கூட்டத்தினருக்கு தக்க சமயத்தில் உயிரை காப்பாற்றி அந்த குலம் தழைக்க உதவியவர்கள் இந்த ராவுத்தர்கள்.
அந்த நன்றிக் கடனுக்காகத்தான் ராவுத்தரை குலதெய்வமாக்கி வழிபடுகிறார்கள் கவுண்டர்கள்.
ஆதாரம் : கவிஞர் கண்ணாடி பெருமாள் இயற்றிய வெள்ளையம்மாள் காவியம் மற்றும் தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் புகழ்கிறார்.
வேங்கை மரத்தினால் ஆன ராவுத்தர் சாமிக்கு “திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைன்னு வாரத்துக்கு ரெண்டு நாள் பூசை செய்யப்பட்டும்அமாவாசை அன்று விசேஷ பூசையும் செய்வார்கள்.
மூணு வருடங்களுக்கு ஒருமுறை ராவுத்தர் சாமிக்கு பொங்கலிட்டு கிடா வெட்டுவார்கள்.முன்னோர்களின் உயிரையும் தங்களது குலத்தையும் காப்பாற்றிய ராவுத்தர்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிடும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மத நல்லிணக்கத்தின் முன்னோடிகள் என்பதில் தமிழர்கள் பெருமை கொள்ளலாம்தானே!!!
முத்தால் ராவுத்தர்
முத்தால் ராவுத்தர் என்பவர் காவல் தெய்வங்கள் பல இடங்களில் நம் ஹிந்து சகோதரர்கள் வணங்குகின்றனர். இதுமட்டுமின்றி திரவுபதி அம்மன் காவல் வீரனாக இருக்கும் முத்தியாலு ராவுத்தர். இவர் முஸ்லிம் அரசர் என்றும் கூறுகின்றனர்.
ராவுத்தர்கள் மண்டகப்படி
#இராமநாதபுரம்_சேதுபதி_சமஸ்தான_திருக்கோயில்
#மதநல்லிணக்கத்திற்கு_ஒரு_எடுத்துக்காட்டு .
முஸ்லிம் மண்டகப்படி ராவுத்தர்கள் வரவேற்ற முருகன் கோவில் பங்குனி உத்திரத்தேர்.
அன்றைய முதுகுளத்தூர் முருகன் கோவில் பங்குனித் தேரோட்டம் மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணம்.
திருக்கோயில் எதிரே ஒரு குளம் ஒன்று அந்த குளத்திற்கு பெயர் (சரவணப்பொய்கை என்ற முதுகுளம்)
ஒரு காலத்தில்சரவணப்பொய்கையின் மேற்கு கரையில் அனைத்து சமூகங்களுக்கும் மண்டகப்படிகள் சரவணப்பொய்கையின் தென்மேற்கு மூலையிலே பிள்ளையார் கோவில் அருகில் முஸ்லீம்களுக்கும் மண்டகப்படி ஆம் ராவுத்தர் மண்டகப்படியும் உள்ளது இன்றைய தலைமுறை அறியாத செய்தி இது.
சுப்ரமணிய சுவாமி கோவிலிலே பத்து நாட்கள் நடக்கும் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்து மண்டகப்படியில் தேரோட்டத்திற்கு வரவேற்புஇறுதி நாளில் முஸ்லிம்மண்டகப்படியில் வரவேற்பு முருகன் கோவில் தேரோட்டத்திற்கு முதுகுளத்தூர் ராவுத்தர்கள் வரவேற்பு அளித்து நீர் மோர் எங்கள் பகுதிக்கேயுரிய பாணாக்காரம் பக்தர்களுக்கு பரவசத்துடன் கொடுத்து மகிழ்ந்த எங்கள் பெரியவர்களின் மத எல்லைகள் கடந்த இணக்கமான வாழ்வு நினைவு கொள்ளத் தக்கது (இறுதியாக தேரோட்டத்திற்கு வரவேற்பளித்து நீர் மோர் கொடுத்து மகிழ்ந்தவர் பெரியவர் கூலையன் அப்பாஸ் ராவுத்தர் அவர்கள்).
அவருக்கும் பின்னே யாரும் இதை தொடந்ததாகத் தெரியவில்லைஅந்த மண்டகப்படியும் தற்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலமாகச் செயல்பட்டு வருகிறது.
கோவில்கள் கட்டிய ராவுத்தர்கள்
கோவையை அடுத்த அவினாசி அருகே ஒரு கிராமத்துக்கு சென்றால் ஒரு சிறிய மாரியம்மன் கோயிலை காணலாம். அந்த கோவில் சற்று வித்தியாசமாக காணப்படும். வழக்கமாக இந்து கோயில்களில் கோபுர கலசங்கள்தான் இந்து முறைப்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த கோயில் கோபுரம் மட்டும் மசூதிகளில் இருப்பது போல, கலசம் இருக்கும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் கட்டப்பட்டதற்கும் ஒரு சுவாரஸ்ய பின்னணி இருக்கிறது.
மைசூர் மன்னர் ஹைதர்அலி கொங்கு மண்ணை கைப்பற்றிய சமயத்தில், அவரது ராணுவ வீரர்களைத் தங்க வைக்க ஏராளமான காலனிகளை ஏற்படுத்தினார். அவினாசி அருகேயும் ஒரு காலனி உருவானது. இந்த காலனி கொங்கு மண்ணில் வடக்கு மற்றும் தெற்கு கிராமங்களை இணைக்கும் முக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அவினாசியில் இருந்து சத்தியமங்கலம் சென்று அங்கிருந்து எளிதாக ஹைதர் அலியின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டிணத்துக்கும் மிக வேகமாக சென்று விட முடியும். அதனால், அவினாசி பகுதிக்கு ஹைதர் அலி மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அந்த கால நிர்வாக முறைப்படி, ஒவ்வொரு கிராமங்களையும் நிர்வகிக்க வரி வசூலிக்க கிராம நிர்வாக அதிகாரிகளை ஹைதர் அலி நியமிப்பது வழக்கம்.
அவினாசி அருகே அமைக்கப்பட்ட காலனிக்கு ராவுத்தர் என்பவரை ஹைதர் அலி கிராம நிர்வாக அதிகாரியாக நியமித்திருக்கிறார். புதியதாக நியமிக்கப்பட்ட ராவுத்தர் கருணை உள்ளம் கொண்டவர். காலனி மக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொண்டார். முக்கியமாக வரிவிதிப்பில் கருணையுடன் நடந்து கொண்டார். ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அப்போதிருந்தே கொங்கு மண் வர்ததகத்திற்கு பெயர் போனது. அவினாசி முக்கிய சந்திப்பு என்பதால், இந்த வழியாகத்தான் அனைத்து வணிகர்களின் வண்டிகள் செல்லும். பெருஞ்சாலைகளில் வணிகர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவும் கொள்ளைக் கும்பலும் உலவும். அந்தக் கொள்ளைக் கும்பல்களை எல்லாம் ராவுத்தர் ஒழித்துக்கட்டினார். அதனால், வணிகர்கள் பயம் இல்லாமல் வர்த்தகத்தில் ஈடுபட முடிந்தது.
இப்படி தனது நற்செயல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்த ராவுத்தருக்கும் ஒரு பிரச்னை வந்தது. அவரது குழந்தையை ‘சிக்கன்பாக்ஸ்’ எனப்படும் சின்னம்மைத் தாக்கியது அப்போதெல்லாம் சின்னம்மை வந்தால் ‘மாரியத்தா உடல்ல இறங்கியிருக்கா’ என்பார்கள். ‘அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்து அவளை வேண்டிகிட்டா போயிடுவா ‘ எனவும் கூறுவது உண்டு.
ராவுத்தரிடமும் சிலர் ‘மாரியாத்தா குழந்தை மேல வந்திருக்கா’ என்றனர். ராவுத்தருவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஆனாலும் மனதில் நினைத்துக் கொண்டார், ‘தாயே எனது மகளை குணப்படுத்தி விடு… நான் உன் நினைவாக உனக்கு கோயில் கட்டுகிறேன் ‘ என வேண்டிக் கொண்டார். குழந்தை ஆச்சரியமான வகையில் வெகு விரைவாக குணமடைந்தது. இதையடுத்து, ராவுத்தர் தனது வேண்டுகோளின்படி, அந்த காலணியில் மாரியம்மனுக்கு சிறிய கோயில் கட்டினார்.இஸ்லாமியன் மாரியாத்தாவுக்கு கோயில் கட்டினான் என்பதற்கு அடையாளமாக கோயில் டூம் மட்டும் இஸ்லாமிய முறையில் அமைத்தார்.
தனது அறச் செயல்களாலும் சமூக நல்லிணக்கப் பணிகளாலும் அந்த கிராம மக்களின் இடம் பிடித்த ராவுத்தர் மறைந்த பிறகு, அவரது பெயரையே அந்த கிராமத்துக்கு மக்கள் சூட்டினர். அந்த கிராமம்தான் ராவுத்தர்பாளையம். இப்போதும் இந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ராவுத்தன்” என்று பெயர் சூட்டும் பழக்கம் இருக்கிறது.
– எம். குமரேசன், விகடன்[1]
மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்
மாரியம்மனைப் புகழ்ந்த மதார்சா ராவுத்தர்
கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடிய காதர் பாட்சா பற்றியும்
புதுச்சேரியில் முருகனுக்கு கோவில் கட்டி நிர்வகித்துவரும் முகமது கௌஸ் குடும்பம் பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.
இப்போது மாரியம்மனைப் பாடிய மதார்சா இராவுத்தர் எனும் இசுலாமியர் பற்றி அறிவோம்.
கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் சூலக்கல் என்ற ஊரின் மாரியம்மன் கோவில் புகழ்பெற்றதாகும்.
இந்த மாரியம்மன் மீது பொள்ளாச்சி வட்டம் அம்பாரம்பாளையம் ஊரைச் சேர்ந்த மதார்சா ராவுத்தர் எனும் புலவர் அம்மானை, கும்மி, காரணச்சிந்து என மூன்றும் பாடி அவை அச்சில் வெளிவந்தன.
1909 இல் அச்சிட்டு முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து 1919 இல் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சிட்டது பொள்ளாச்சி ‘கோபாலவிலாச அச்சுக்கூடம்’ என்று உள்ளது.
ஒரு இடத்தில் ‘செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்’ என்று கூறும் அப்புலவர்,
‘ஜாதிபேதம் பாராமல் தாயாரே காக்கவேண்டும்’ என்று மாரியாத்தாளை வேண்டுகிறார்.
(இசுலாமியர் ஒரு சாதியாம்!)
சூலக்கல் பற்றி கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்,
‘பூமலரும் தீங்கனியும் பொலிந்து நிறைந்தோங்கும்
பைங்காவும் செந்நெல்களும் பருத்தகன்னல் கழனிகளும்
வாழை கமுகுபலா மஞ்சள் இஞ்சி ஏலங்களும்
பொன்மேலும் ஓங்கும் விதமான பண்ணைகளும்
பொன்னி நதியென்னப் புகழ்பெற்ற நதிவளமும்
சூழ்ந்துசெல் வம்திகழும் சூலக்கல்’
தன்னைப் பற்றி கூறுகையில்,
“ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்
ஜமால்ரா வுத்தன்பெற்ற தவோபல புத்திரனாம்
அங்காள பரமேசுவரி அம்புயப் பதங்களையும்
மதுரைவீரன் உபய வனசமலர்த் தாளிணையும்
பக்தியுடன் நாளுடம் பரவித் துதிசெய்வோன்
மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும்
ஓட்டிக் கருவறுத்த உத்தமனாம் மதார்சா”
என்று பாடுகிறார்.
இதோ ஒரு கும்மிப்பாட்டு எடுத்துக்காட்டுக்காக,
“கணித சக்கரம் உள்ளவளாம் மாரி
கம்பீரமான பரஞ்சோதி
பணிதி அணிந்திடும் மாரியம்மன்
பாடிக்கும்மி அடியுங்கடி”
ஆனைமலை என்.ஏ.சிவசூரியம்பிள்ளை இயற்றிய கவியில்,
“மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்
எதார்த்த விதமாக எண்ணி பதார்த்தமது
இன்னதெனக் கேரா எளியர் சுபமடைய
சொன்னதமிழ்ப் பாவே சுகம்’
என்று பாராட்டி பாடியுள்ளார்.
புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானப் புலவர் முத்துசாமிப்பிள்ளை தனது கவிதையில் இவரை ‘தெளிந்த தமிழ் அறிஞன்’ என்று பாராட்டுகிறார்.
[நன்றி: கொங்கு ஆய்வுகள் (நூல்)
ஆசிரியர்: செ.இராசு]
(மேற்கண்ட நூலில் ‘கொங்குநாட்டு இசுலாமியப் புலவர்கள்’ எனும் தலைப்பில் ஐயாவு ராவுத்தர், மதார்சா ராவுத்தர், ஜம்பை காசிம், கா.அப்துல் சுகூர், முகம்மது யாக்கூபு, கா.நயினார் முகம்மது, இ.கமாலுதீன் ஆகிய புலவர்கள் பற்றி உள்ளது)

இந்த தகவல் ஆங்கிலத்தில் The New Indian Express[1]
இப்படி பல ஊர்களில் இராவுத்தர்களுக்கு கோவில்களிள் மரியாதையும், மண்டகபடியும் ஒற்றுமை காரணமாக இருந்துள்ளது

துருக்கிய வம்சாவளியினர்
செல்யூக் பேரரசு சேர்ந்த துருக்கிய குதிரைக்காரர்கள் தான் வணிகத்திற்காக சோழ நாட்டிற்கு வந்தனர்
ராவுத்தர்களை பற்றி பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை பற்றிய குறிப்புகள் பத்தாம், பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது (10th Century to 11th Century – Chola Dynasty). அதில் அதிகமான அறிஞர்கள் இவர்களை துருக்கிய – இந்தியர் வம்சாவளி (Turko-Indian) என்று கூறியுள்ளனர் அதாவது துருக்கிய தந்தைக்கும் இந்தியா தாய்க்கும் பிறந்தவர்கள் அதற்கு ஆதாரமாக இவர்கள் ஹனபி (இந்தியாவை ஆட்சி செய்த துருக்கியர்கள் பின்பற்றிய சட்டம்) சட்டத்தையும் தந்தையை அத்தா(Ata) என்று அழைக்கும் வார்த்தையும் பழங்காலத்தில் (அதாவது துருக்கியர்களாகிய முகலாயர்கள், ஓட்டோமான் பேரரசுக்கெல்லம் முன்பு) இருந்த துருக்கிய வார்த்தை என்பதும் இவர்கள் வரலாற்றை பிரதிபலிக்கிறது. இந்த ஹனபி சட்டத்தை பின்பற்றிய அக்கால முஸ்லிம் அனைவரும் பொருளாதார – நிலவுடைமை அனைத்தையும் அதிகமாக வைத்திருந்தனர் ராவுத்தர்களும் ஜமீந்தார், பாளைக்காரர், மிராசுதார், சேர்வை பிள்ளை,அம்பலம் போன்ற பட்டங்களும் பதவிகளையும் பேற்றிந்தனர். சிலர் இவர்கள் தமிழ் அரசர்கள் படையில் இருந்த துருக்கிய போர் வீரர்கள் மற்றும் மறவர்கள் சிலர் முஸ்லிமாக மாறியப்பின் உருவானவர்கள் என்றும், சிலர் அரேபிய(பாரசீக) மற்றும் துருக்கிய நாட்டை சேர்ந்த குதிரை வணிகர்கள் என்றும் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது தமிழ் மீது பற்று கொண்டு தாய்மொழியை அதிகம் நேசித்த சமூகமாகவும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய பணியும் சிறப்புடையது.
ராஜ்யங்கள்
தென் இந்தியாவை பொருத்தவரை முகலாயரோ ஆப்கானியரோ நுழையவில்லை அல்லது நுழைய முடியவில்லை காரணம் தென்னகத்தில் பலமான தமிழ் பேரரசுகள் இருந்தன. ஆனால் தென்னகத்தில் இரண்டு முஸ்லிம் சமூகம் மட்டுமே போர்த்தொழில் உடையது அதில் அதிகமாக ராவுத்தர்கள் இருந்துள்ளனர் சிறிதாக பதான் சமூகங்கள் வடநாட்டில் இருந்து குடிபெயர்ந்தது வாழ்ந்து வந்தது. தென் இந்தியாவில் ராவுத்தர் சமூக மக்கள் தொகையில் அதிகமாக இருந்தார்கள். இவர்களே இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளில் திரளாக வாழ்கின்றனர் இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பிடும் அளவு வாழ்கின்றனர் முக்கியமாக தமிழகம் கேரளாவிலும் அதிகமாக வாழ்கின்றனர்.
அதுமட்டுமின்றி 13th நூற்றாண்டில் குதிரை வனிகர் ஒருவர் அவரின் முழு குதிரை படையையும் வைத்து கொண்டு ஆந்திர பிரதேச பகுதிகளில் சமஸ்தானத்தை உருவாக்கினர் என்ற வரலாறும் உண்டு எனவே தென்னகத்தை ஆண்ட சிறிய ராஜ்யங்கள் ஆன ஆற்காட்டு நவாப், மாபர் சுல்தான்(அஹ்சன் காணை கொன்றப்பிறகு), பாண்டிய சுல்தான் (ஜமாலுதீன்) போன்ற அரசுகள் இராவுத்தர்களே ஆண்டுள்ளார்கள். அதனால் தான் அன்றிலிருந்து இன்று வரை இராவுத்தர்களுக்கு மற்ற தமிழ் நாட்டிலில் வாழும் இஸ்லாமியர்களை விட அதிகமாக நிலவுடைமை இருக்கின்றது. இவர்கள் அக்காலத்தில் இராவுத்தர் எனும் விகுதியை இராணுவ பொருப்புடைய முசுலிம்கள் என்று அழைக்க பெற்றுள்ளனர். இவர்கள் தான் பிற்காலத்தில் சுல்தான்களாகவும், நவாபுகளாகவும் தமிழகத்தில் இருந்துள்ளனர். ஆதாரமாக பல விஷயங்கள் உண்டு பகதூர்(Bahadur), சாயிபு(saheb) கான்(khan) போன்ற பட்டங்கள் உடைய இராவுத்தர்களை அதிகமாக நாயக்கர் ஆட்சியிலே காணமுடியும். அவர்களே பிற்காலத்தில் ஆற்காட்டு நவாபுகளாக ஆக விளங்கினர். குறிப்பாக ஆற்காட்டு நவாபின் ஆட்சி மொழி தமிழே முகலாயர்களின் கீழ் ஆட்சி செய்தலால் உருது மொழி வந்தது அதுவும் உருது என்பது முகலாயர்க்கே அதிகார மொழி அல்ல பாதுகாப்பு மொழி தான் (படைப்பிரிவினர்க்குள் பேசக்கூடிய மொழி இதை முகலாயர்கள் பாரசீக சமஸ்கிரதம் போன்ற பல மொழி கொண்டு உருவாக்கினர்) பிற்காலத்தில் நவாபுகளில் சிலர் தமிழை தள்ளிவிட்டு உருதை உள்வாங்கி கொண்டனர். வாலாஜா நவாப் வரி வசூலித்த இடங்களும் அவர் உருவாக்கிய மசூதிகளுமே ஒரு சாட்சி தான். அதாவது வாலாஜா நவாப் வரி வசூலித்த இடங்களும் மசூதி நிறுவிய இடங்களும் அனைத்துமே ராவுத்தர்கள் பூர்வீகமாக அதிகமாக வாழும் இடங்களே அந்த மசூதிகளில் காலம் காலமாக தலைவர்களாவும் இருப்பவர்கள் இவர்களே.
ராவுத்தர்கள் அனைவரும் ஆண்கள் மட்டுமே இந்நாட்டிற்க்கு வந்தனர் இவர்களுக்கு பெண் குடுத்து குடும்பங்களை தமிழகத்தில் உருவாக செய்தவர்கள் சோழ பாண்டிய நாட்டை சேர்ந்த மறவர்கள். அதேபோல் மறவர்கள் மூர்க்க தனம் உடையவர்கள் என்றாலும் அதிக அன்பு நிறைந்தவர்கள். பூர்வகுடி மறவர்கள் தான் சோழ, பாண்டிய நாட்டை ஆட்சி செய்தனர் என்று கண்ணதாசன் எழுதிய “சேரமான் காதலி” புத்தகத்தில் படித்திருக்கிறேன் இவர்களின் தாய் மாமன் உறவிலே மாலிக் கபூரின் படையை எதிர்த்து மதுரையில் ராவுத்தர்களின் குதிரைப்படை வீரர்கள் போரிட்டனர். அப்படி பட்ட பாசத்தினாலே தான் இன்றும் முக்குலத்தோர் ராவுத்தர்கள் உறவு பலமாக இருக்கிறது. அதே போல் சில ஆசிரியர்கள் தமிழக தென்னாட்டை சேர்ந்த ராவுத்தர்கள் மறவர்கள் என்றே கூறுகின்றனர்.
இதுமட்டுமின்றி புதுகோட்டை கள்ளர்கள் (அம்பலக்காரர்கள்) முஸ்லிமாக மாறி ராவுத்தர் எனும் விகுதியை பயன்படுத்தினர். இன்றும் மதுரை சிவகங்கை முதல் கன்னியாகுமரி வரை ராவுத்தர்கள் அம்பலக்காரர், நாட்டாமைக்காரர் போன்ற பட்டங்களை பயன் படுத்திக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். இவர்களில் பிறர்மலை கள்ளர்கள் சீயான் முறை இன்றும் மதுரை தேனி பகுதிகளில் உள்ளது.
ராவுத்தர் பிரபலங்கள்
* கண்ணியமிக்க காயிதே மில்லத் சாகிப் என்கிற முகமது இஸ்மாயில் ராவுத்தர் – (இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக் உருவாக்கியவர்)
* கான் பகதூர் கலிஃபுல்லாஹ் சாகிப் ராவுத்தர் – (அரசியல்வாதி)
* பாத்திமா பீவி – (இந்தியாவின் முதல் உச்சநீதி மன்ற பெண் நீதிபதி)
* இராமாயண சாயபு என்றழைக்கப்பட்ட பா.தாவூத் ஷா – (சிறந்த இதழாசிரியர். எழுத்தாளர்)
* காதர பாட்சா ராவுத்தர் (மெய்வழி சாலை ஆண்டவர்) - மெய்வழி சாலையை நிறுவியவர்
* கா.மு.ஷெரீப் – (பாடலாசிரியர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர்)
* டான் ஸ்ரீடத்தோடாக்டர் எஸ். ஓ. கே. உபைத்துல்லா காதிர் பாட்சா – (இந்தியா சுதந்திர போராட்ட வீரர் & மலேசிய அரசியல்வாதி)
* அமீர் ஹம்சா ராவுத்தர் – (சுதந்திர போராட்ட வீரர் & நேதாஜியுடன் நெருக்கமான நண்பர் செல்வந்தர்)
* காஜா மியான் ராவுத்தர் – (இந்தியா சுதந்திர போராட்ட வீரர் & தொழிலதிபர்)
* ஜமால் முகமது சாகிப் – (இந்தியா சுதந்திர போராட்ட வீரர் & தொழிலதிபர்)
* பக்கிர் முகமது ராவுத்தர் சேட் – (இந்தியா சுதந்திர போராட்ட வீரர் & தொழிலதிபர்)
* உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் – (இந்தியா சுதந்திர போராட்ட வீரர்)
* இசைமுரசு என்று அழைக்கப்படும் நாகூர் அனிபா – (அரசியல்வாதி & பிரபல பாடகர்)
* குலாம் காதிறு – புகழ் பெற்ற பாவலர், நாவலர், உரையாசிரியர்
* எம் கே முஸ்தபா – 1950 களில் நடிகர் ( நிறைய வெற்றி படம் தந்திருக்கிறார்).
ஹரிச்சந்திர 1956யில் திரைப்படம் சிவாஜியுடன் முஸ்தபா
சிவகங்கை சீமை சின்ன மருது ஆக முஸ்தபா நடிப்பு
* பாருக் அப்துல் ரஹிமான் – (இயக்குனர் & எழுத்தாளர்)
* இப்ராஹீம் ராவுத்தர் – (பிரபல தயாரிபபாளர்)
* ஹக்கீம் ராவுத்தர் – (மலையாள நடிகர் & தயாரிப்பாளர்)
* ஷாம் என்கிற சம்சுதீன் இப்ராஹிம் – (நடிகர்)
* பாசில் – (தமிழ் மற்றும் மலையாள இயக்குனர்)
* பகத் பாசில் – (மலையாள நடிகர்)
* பாபி கோட்டகர – (மலையாள நடிகர்)
* ஆசிப் அலி – (மலையாள நடிகர்)
* சித்திக் – (இயக்குனர்)
* ஷாயேப் கான் ராவுத்தர் – (மலையாள இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர்)
* ஜாவித் ஹசன் – ( Founder and chairman of NeST Group | NeST Technologies - அமெரிக்கா தொழிலதிபர்)
நன்றி
No comments:
Post a Comment